அமெரிக்கா – இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் திடீரென வீசிய புழுதி புயலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பரவிய தூசி துகள்களால், வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 4 கிலோமீற்றர் தூரத்துக்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்துகளில் 6 பேர் பலியானதுடன், 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து நடந்த பகுதிக்கு பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.