இந்த ஆண்டு (2024) அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டெனால்ட் டரம்பின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ட்ரம்பிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் கணக்கில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
இதேவேளை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும் ஒன்றாகப் பாடுபடுவோம் என பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.