NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு !

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் இடம்பெற்றது.

இதில், மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கனை, அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (28) நேரில் சந்தித்து பேசுகிறார்.

குறித்த சந்திப்பில் கனடாவில் இந்த ஆண்டு ஜூனில் காலிஸ்தானிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என கூறப்படுகிறது.எனினும், அதுபற்றிய உத்தியோகபூர்வ தகவல் வெளியாகவில்லை.

இதுபற்றி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேத்யூ மில்லர் தெரிவிக்கையில் ,

இரு தலைவர்கள் இடையேயான விவாதம் பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது என மறுத்துள்ளார்.

எனினும், இந்த விவகாரம் பற்றி நாங்கள் முன்பே தெளிவுப்படுத்தி விட்டோம். நிஜ்ஜார் படுகொலை சம்பவத்தில் கனடாவின் விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியாவிற்கு எதிராக கனடா தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, நியூயோர்க்கில் கடந்த செவ்வாய் கிழமை நடந்த வெளியுறவுக்கான சபையில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா அதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை என்றும் அது தங்களுடைய நாட்டின் கொள்கையல்ல என்றும் தெரிவித்தார்.

கனடாவின் குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றவை என மறுத்ததுடன், நிஜ்ஜார் படுகொலையில் குறிப்பிட்ட தகவலை வழங்கினால், அதுபற்றி இந்தியா விசாரணை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

Share:

Related Articles