இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து இது தொடர்பான நடைமுறை தொடர்பில் குறிப்பிட்ட விளக்கமளித்ததாக மின்சார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மின்சார துறையுடன் தொடர்புடைய 31 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான முன்மொழிவுகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சீர்திருத்தக் கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளில் அந்தப் பிரேரணைகள் தொடர்பில் கவனம் செலுத்தத் தயார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.