அம்பலாந்தோட்டை – மாமடல பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக இந்தக் கொலை
நடந்திருப்பதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறு பேர் கொண்ட குழு ஒன்று வீடொன்றிற்குள் புகுந்து அங்கிருந்த மூவரை வெட்டிக் கொன்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, ஏனைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எலேகொட மற்றும் மாமடல பகுதிகளைச் சேர்ந்த உயிரிழந்தவர்கள் 29 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.