NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அம்பாறையில் விபத்து- இரு இளைஞர்கள் பலி!

அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

 மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 23 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதார்.

அத்தோடு படுகாயமடைந்த 19 வயதுடைய மற்றுமொரு இளைஞன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதார்.

மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது உயிரிழந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த நிலையில் விபத்திற்கு உள்ளாகி உள்ளதுடன் விபத்தில் இறந்த இவ்விருவரும் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles