NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அம்பாறை மாவட்டத்தில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்ப்பு..!

நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது .

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை 31 ஆம் திகதியன்று மாலை காணாமல் சென்ற குறித்த மீனவர் நண்பருடன் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் சென்றிருந்தார்.இந்நிலையில் தனது கணவரைக் காணவில்லை என மனைவி செவ்வாய்க்கிழமை (01) காலை இறக்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.குறித்த முறைப்பாட்டிற்கமைய செவ்வாய்க்கிழமை ( 01) குறித்த காணாமல் சென்ற மீனவரின் நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து இன்று (01) செவ்வாய்க்கிழமை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல் சென்ற மீனவரின் சடலம் நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் மீட்கப்பட்ட மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles