NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘அரகலய’ மக்கள் இயக்கத்திற்கு எதிராக ஆணைக்குழுவை நியமிக்க கோரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் ‘அரகலய’ மக்கள் இயக்கத்திற்கு நிகரான போராட்டங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கு பூரண அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சரவையினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் குணவர்தன, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே அமைச்சரவை இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Share:

Related Articles