NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசத்துறை அதிகாரிகள் ஐபோன் பயன்படுத்த தடை – ரஷ்யாவின் அதிரடி முடிவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அரசத்துறை பணிகளுக்கு வெளிநாட்டு சாதனங்களை சார்ந்து இருப்பதை தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகள் அப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த ரஷ்யா தடை விதித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் அரச அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன ஐபோன் மற்றும் இதர சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்று ரஷ்ய வர்த்தக துறை அமைச்சு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவின் தொலை தொடர்பு, அரச ஊடகத்துறை என்று அரசு துறையை சேர்ந்த அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் எனவும், ஏற்கனவே குறிப்பிட்ட சில நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இந்த பட்டியலில் அனைத்து அரசு அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles