NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘அரசாங்கத்திடம் இருந்து EPF/ETF காப்பாற்றுவோம்’ – கொழும்பில் பாரிய போராட்டம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

EPF/ETF கொள்ளை எதிர்ப்பு தெரிவித்து இன்று (10) கொழும்பு கோட்டை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி உள்ளுர் கடனை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம், நாட்டின் ஊழியர்களுக்கு சொந்தமான EPF/ETF நிதிகளை இழக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்திடம் இருந்து EPF/ETFஐ காப்பாற்றுவோம்’ போன்ற வாசகங்களை ஏந்தி இந்தப் போராட்டக்காரர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

Share:

Related Articles