18 ஆவது இந்திய பாராளுமன்றில் முதலாவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் புதிய பாராளுமன்றின் சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ய நரேந்திர மோடி சென்ற போதே இந்திய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்காளால் அரசியல் சாசன புத்தகத்தை உயர்த்தி காட்டி முழக்கமிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கூட்டத் தொடர் எதிர்வரும் மாதம் ஜூலை மூன்றாம் திகதிவரை நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 280 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்திய மக்களவை தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி கதந்த மே மாதம் முதலாம் திகதி நிறைவடைந்திருந்த நிலையில் 18 ஆவது இந்திய மக்களவை தேர்தலின் வாக்குபதிவுகள் 28 மாநிலங்களிலும் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களிலும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.
குறித்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதுடன் 543 ஆசனங்களை கொண்ட இந்திய நாடாளுமன்றில் 240 ஆசனங்களை இந்திய பாரதிய ஜனதா கட்சி பெற்றமை குறிப்பிடத்தக்கது.