NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச ஊழியர்களின் எண்ணிக்கை 2.9 சதவீதம் குறைந்துள்ளது – நிதியமைச்சகம் அறிக்கை

2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் அரச துறையில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2.9 சதவீதம் குறைந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2023 இறுதிக்குள், அரச துறையில் பணிபுரிந்த மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,353,860 ஆகும்.

புதிய ஆட்சேர்ப்புகளை தற்காலிகமாக நிறுத்துதல், புதிய பணியிடங்களை உருவாக்குதல் மற்றும் ஓய்வு பெறுதல் ஆகியவை ஊழியர்களின் எண்ணிக்கை குறைவுக்கு வழிவகுத்துள்ளன.

கடந்த ஆண்டு (2023) இறுதிக்குள், அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் மொத்த எண்ணிக்கையின்படி, பணியாளர்களின் பயன்பாட்டு விகிதம் 77 சதவீதமாக உள்ளது.

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது நான்கு சதவீதம் குறைந்துள்ளது.

அரச செலவீனங்களைக் குறைக்கும் வகையில் அரச விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles