NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச ஊழியர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் அதிகரிப்பு!

அரச அங்கீகாரம் பெற்ற ஊழியர்களை கருத்திற்கொள்ளாமல் வழங்கப்பட்ட நியமனங்கள் காரணமாக அரச ஊழியர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் அதிகரித்தது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொடுக்கும் பட்டதாரிகளைப் பற்றிப் பேசியதைப் போன்று பட்டதாரிகளின் முழுப் பிரச்சினையையும் நாம் பேச வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டு தடவைகள், முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(ஆகியோர் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் வழங்கப்படும் போது பிரதேச செயலக அலுவலகங்களில் ஒரு நாற்காலியில் இரண்டு மூன்று பேர் அமர்ந்தனர். அப்போது அரச அங்கீகாரம் பெற்ற ஊழியர்களைக் கருத்தில் கொள்ளாமல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.  இதனால், 17 இலட்சம் அரச ஊழியர்களாக அதிகரித்துள்ளனர்.

எமது நாட்டில் உள்ள 10 இலட்சம் அரச ஊழியர்களைக் கொண்டு இந்த தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என முகாமைத்துவ சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles