நாடாளவிய ரீதியிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் நாளையதினம் புத்தாண்டு கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபைகளுக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.
புதிய வருடத்தில் “தூய்மையான இலங்கை” தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.