NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச வைத்தியசாலைகளில் பெரும்பாலான CT ஸ்கேனர்கள் செயலிழப்பு – அவதியுறும் மக்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அரச வைத்தியசாலைகளில் பெரும்பாலான CT ஸ்கேனர்கள் செயல் இழந்துவிட்டதாக என மருத்துவதுறை சார்நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆரச வைத்தியசாலைகளில் 44 CT ஸ்கான் இயந்திரங்கள் உள்ளன என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 12 CT ஸ்கான் இயந்திரங்களும், குருநாகல, கராப்பிட்டிய, திருகோணமலை, அம்பாந்தோட்டை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, ஹொரணை, தேசிய பல்வைத்தியசாலை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மற்றும் மாத்தறை ஆகிய வைத்தியசாலைகளில் சிடி ஸ்கேனர்கள் இயங்கவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சில வைத்தியசாலைகளில் CT ஸ்கேனர்கள் பல மாதங்களாக இயங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் வறியமக்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர்களால் தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியாது என்பதாலும்,இதன் காரணமாக அரசாங்கம் இந்த இயந்திரங்களை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த இயந்திரங்கள் இயங்க மறுத்துள்ளதால் சில நோய்களை அடையாளம் காண்பதில் மருத்துவர்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றன என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles