NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அர்ச்சுனா MPக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்யுமாறு அநுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

செல்லுபடியாகும் சாரதி உரிமம் இல்லாமல் மோட்டார் வாகனத்தைச் செலுத்தி போக்குவரத்து அதிகாரிகளின் கடமையைத் தடுத்ததாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தி அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share:

Related Articles