அறுகம்பையில் மேற்கொள்ளப்படவிருந்தாக கூறப்படும் பயங்கரவாத தாக்குதல் திட்டத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஈரானிய பிரஜையொருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்பை கொலை செய்வதற்கும் அவரை கண்காணிப்பதற்கும் நியமிக்கப்பட்டதாக பர்ஹாட் ஷகேரி என்ற ஈரானிய பிரஜைக்கு எதிராக அமெரிக்க நீதி திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்தநிலையில், குறித்த ஈரானிய பிரஜை அறுகம்பை பகுதியில் இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்து பாரிய துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலை நடத்துவதற்கு ஈரானிய புரட்சிகர இராணுவத்தினரால் பணிக்கப்பட்டவர் எனவும் அமெரிக்க நீதி திணைக்களம் குற்றம் சாட்டியுள்ளது.