NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அறுகம்பை தாக்குதல் குறித்து ஐக்கிய இராச்சியம் விடுத்துள்ள ஆலோசனை..!

அறுகம்பை பகுதியில் அமெரிக்கத் தூதரகம் வழங்கிய பயண எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியம் (UK) தமது இலங்கைக்கான பயண ஆலோசனைகளைப் புதுப்பித்துள்ளது.

அத்தோடு, அறுகம்பை பகுதிக்குச் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.

அறுகம்பையில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளமையினால் முன்னெச்சரிக்கையாக இந்த பயணக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, ஏதேனும் சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.

Share:

Related Articles