NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அவதூறு பரப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுவருவதாக ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க குற்றசாட்டு!

ஐக்கிய ஜனநாயக குரலின் முதலாவது பொதுமநாடு பொதுமக்களின் பங்கேற்புடன் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றிருந்த நிலையில், எனினும், தொடர்ந்தும் தம்மை அவமானப்படுத்தும் சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாக, கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

பணம் கொடுத்து மக்கள் அழைத்து வரப்பட்டதாக தம்மீது அவதூறு பரப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதனை தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு தெளிவுப்படுத்திய அவர், குறிப்பாக தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், தன்னையும் தமது கட்சியையு; ஆதரிக்கும் மற்றும் கொள்கைகளை ஏற்கும் பொதுமக்கள் கொழும்புக்கு வருகை தந்து கட்சிக்கு தேவையான ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என தான் நேர்மையாக மாத்திரமே கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டார்.

ஆனால், யாரோ ஒருவரிடம் பணம் கொடுத்து தவறாக பொதுமக்களை வரவழைத்ததாக அவதூறு பரப்பப்பட்டுள்ளது என்றார்.

இத்தகைய கூற்றுக்கள் பொய் எனத் தெரிவித்த அவர், அப்படி ஒன்றும் நடக்கவில்லை என தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் கூறினார்.

அத்துடன், LED மின்பலகை விழுந்ததில் இரு பெண்கள் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறித்தும் பொய்யான தகவல்கள் பாரப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

குறித்த மின்பலகை எதிர்ச்சியாக விழுந்த நிலையில், பாதிப்புக்குள்ளான இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்து அவர்களை நேரில் சென்று பார்த்து வேண்டிய உதவிகளை செய்துகொடுத்துள்ளதாகவும் கூறினார்.

குறித்த LED மின்பலகை பல்கலைக்கழக மாணவர்களினால் வேண்டுமென்றே அதனை உடைக்கப்பட்டது என்று கூறப்படுதும் முற்றிலும் பெய்யான அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்களின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில், இவ்வாறான பொய்யான தகவல்களை பரப்பும் செயல்களில் இருந்து, தயவுசெய்து அவதூறு பரப்பும் தரப்பினர் இனியாவது விலகிக்கொள்ள வேண்டுமென ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக வேண்டுகோள் விடுத்தார்.

Share:

Related Articles