அவிசாவளை, ஹுலத்துவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹுலத்துவ, கெடஹெத்த பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.