(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அவுஸ்திரேலியாவில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுக்கும் போது ஒரு வாகனத்துக்குப் பதிலாக இரு வாகனங்கள் வருமென, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர திஸாநாயக்க எம்.பி தெரிவித்துள்ளார்.
ஒரு அம்புலன்ஸ் வண்டி பழுதானால், மற்றொன்றில் நோயாளியை அழைத்துச் செல்வதற்காகவே இரண்டு அம்புலன்ஸ்கள் வருகைத்தரும் என்றும் அவர் கூறினார்.
அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்த போது இந்த நிலைமையை அறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மனித உரிமைகளில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.