அவுஸ்திரேலியாவுக்கு எதிரான T-20 தொடரில் 5 போட்டிகளிலும் மொத்தமாக ருதுராஜ் 223 ஓட்டங்களை 55.75 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
சர்வதேச T-20 கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற T-20 தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மார்ட்டின் கப்தில் 218 ஓட்டங்கள் அடித்திருந்தது முந்தைய சாதனையாகும்.
இது மட்டுமல்லாமல் சர்வதேச T-20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ஓட்டங்க ள் அடித்த 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
1. விராட் கோலி : இங்கிலாந்துக்கு எதிராக 231 ஓட்டங்கள்
2. கேஎல் ராகுல் : நியூசிலாந்துக்கு எதிராக 224 ஓட்டங்கள்
3. ருதுராஜ் கைக்வாட் : அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 223 ஓட்டங்கள்
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒருநாள், T-20 , டெஸ்ட் ஆகிய 3 வகையான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் மகாராஷ்டிரா அணித்தலைவராக செயல்பட்டுள்ள அனுபவத்தை கொண்டுள்ளார். ருதுராஜ் தலைமையில் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.