(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தலையிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை மேலும் நீடிக்குமானால் எதிர்வரும் தேர்தலில் கட்சியின் எதிர்காலத்திற்கு பாரிய சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுவது இந்நாட்டின் ஏழை, அப்பாவி மக்களே என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும், தமது கட்சியின் வெற்றிகளில் எப்பொழுதும் பக்கபலமாக இருக்கும் மக்கட்குழுக்கள், இத்தகைய அசௌகரியங்களுக்கு ஆளாக வேண்டாம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கட்சியின் தொகுதிக் குழுக் கூட்டங்களை நடத்துவது எம்.பி.க்களின் பாதுகாப்பிற்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.