NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆங்கில வகுப்புக்குச் சென்ற மாணவி மாயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில், அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவியே நேற்று முன்தினம் (28) முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் வீட்டிற்கு வருகைத்தரவில்லை எனவும், அவரின் கையடக்க தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் மாணவி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles