NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் யுபுன் பெயரில்லை !

இவ்வருட ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ளதாக இலங்கையின் பிரபல தடகள வீரர் யுபுன் அபேகோன் தெரிவித்துள்ளார்.

அவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையாததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற Savona தடகளப் போட்டித் தொடரில் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டி தொடங்குவதற்கு 18 நாட்களுக்கு முன்னர் நேற்று தனது இறுதி உடற்தகுதி பரிசோதனையை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

ஆனால், ஆசியப் பதக்கம் வெல்வதற்குப் பதிவு செய்ய வேண்டிய நேரங்களை கவனமாக ஆராய்ந்து, தனது தற்போதைய நேரம், உடல்நிலை மற்றும் அடுத்த 17 நாட்களில் அடையக்கூடிய மற்றும் அடைய முடியாத விஷயங்களைக் கருத்தில் கொண்டு நீண்ட விவாதத்திற்குப் பிறகு இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles