NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிரியரால் நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – அரியாலை, பூம்புகார் பகுதியில் உள்ள பாடசாலையில் ஆசிரியர் ஒருவரால் நீண்டகாலமாக மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்ததையடுத்து, ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று பாடசாலையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் அந்த பாடசாலையின் கணித ஆசிரியர் என்பதுடன், பாடசாலையிலும் அதன் பின்னரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மாணவியை தொடர்புகொண்டு, அவரை பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு உள்ளாக்க முயற்சித்துள்ளார்.

இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, சம்பவம் குறித்து பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சம்பவம் நடந்தவுடன், கிராம மக்கள் குழுவொன்று பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரைத் தாக்க முயன்றதுடன், எனினும், ஏனைய ஆசிரியர்கள் சம்பவத்தை எதிர்கொண்ட ஆசிரியரைக் காப்பாற்றியுள்ளனர்.

இதன்காரணமாக, கிராம மக்கள் அனைத்து ஆசிரியர்களையும், பாடசாலை அதிபரையும் அச்சுறுத்தியிருந்த நிலையில், பாடசாலை மூடப்பட்டது.

இதன் காரணமாக யாழப்பாண மாவட்ட கல்வி வலய அதிகாரிகள் பாடசாலை மாணவர்களின் பெற்றோருடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share:

Related Articles