ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின.
அதன் பின்னர் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர். அதேவேளையில்இ கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும்இ உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்தனர்.
ஆயினும் அவர்கள் கூறியபடி தலிபான்களின் ஆட்சி நடைபெறவில்லை. இந்த நிலையில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்து நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தலிபான்கள் நேற்றைய தினத்தை தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளனர். தலிபான்கள் காபூல் வீதிகளில் ஊர்வலமாக சென்று கைவிடப்பட்ட அமெரிக்க தூதரக கட்டிடத்திற்கு அருகிலுள்ள மசூத் சதுக்கத்தில் ஒன்று கூடியதோடு சிலர் தங்கள் ஆயுதங்களை ஏந்திச் சென்றுள்ளனர். மற்றவர்கள் கீதங்கள் முழங்க, இளம் சிறுவர்கள் இஸ்லாமிய நம்பிக்கைப் பிரகடனம் பொறிக்கப்பட்ட இயக்கத்தின் வெள்ளைக் கொடியை ஏந்தி சென்றுள்ளனர்.
குறித்த இந்த ஆட்சி பாராட்டுக்ககுரியதாகவும் தலிபான் அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.