NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆண்கள் ஆசியக் கிண்ணத்தில் முதல் முறையாக பெண் நடுவர்கள் !

கட்டாரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆடவர் ஆசியக் கிண்ண போட்டியில் ஜப்பானிய வீராங்கனை யோஷிமி யமாஷிதா உள்ளிட்ட பெண்கள் நடுவராக இருப்பார்கள் என்று அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்றறும் ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட யமாஷிதா, ஜனவரி-பெப்ரவரியில் நடைபெறும் பிராந்திய சம்பியன்ஷிப்பிற்காக மற்ற நான்கு பெண்களுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ அசிஸ்டென்ட் ரெஃப்ரி ((VAR) ) அமைப்பும் போட்டியில் “முழு அறிமுகமாக” இருக்கும் என்று AFC தெரிவித்துள்ளது. ஆசியக் கிண்ணப் போட்டியில் முதன்முறையாக 24 அணிகள் பங்கேற்கின்றன, போட்டியை நடத்தும் கட்டார் நடப்பு சாம்பியனாகும்.

Share:

Related Articles