மனித மூளையில் குறிப்பிட்ட பகுதியில் மிகச்சிறிய கருவியொன்றைப் பொருத்துவதன் மூலம் மனதில் நினைப்பதை விரும்பிய மொழிகளில் வார்த்தைகளாக அறிய முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பேசும், கேட்கும் திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. கால்டெக் என்ற தொழில்நுட்ப நிறுவனமே இதனை உருவாக்கியுள்ளது.
இதன்படி இரண்டு பேரின் மூளையில் இந்தக் கருவியை பொருத்தி சோதித்ததில் அவர்கள் நினைத்தததை 79 சதவீதம் துல்லியமாக வார்த்தையாக அறிந்துகொள்ள முடிந்ததாகவும் கலிபோர்னிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் மூளையில் விடுக்கப்படும் சமிக்ஞைகளைப் பெற்று அதனை உடனடியாக மொழியாகவும் வார்த்தையாகவும் இக் கருவி மாற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளது.