(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் 23,534 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணினி அவசர பதிலளிப்பு அமைப்பின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியியலாளர் சாருக் கெமுனுபொல இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 70 சதவீதமான முறைப்பாடுகள் பெண்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பெற்று தருவதாக இணைய வழியில் இடம்பெற்ற மோசடிகளே அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பிரமிட் கொடுக்கல் வாங்கல் தொடர்பான மோசடிகளும் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போலியான பேஸ்புக் கணக்கு உருவாக்கியமை, பேஸ்புக் கணக்குகளை ஹேக் செய்தமை உள்ளிட்ட முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதத்தில் மொத்தமாக 3,328 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை 101 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.