NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆனந்த் அம்பானி முதன்முதலில் எழுதிய காதல் கடிதத்தை ஆடையாக அணிந்துவந்த ராதிகா!

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா வைபவங்கள் வெகுவிமர்சையாக இடம்பெற்று வருகின்றன.

சிசிலியின் பலேர்மோவில் ஆனந்த்-ராதிகா திருமண வைபவ விழா பிரம்மாண்ட கப்பலில் விழாக்களுடன் கொண்டாடப்பட்டது.

இந்த வைபவத்தில், ஆனந்த் அம்பானியின் காதல் கடிதம் அடங்கிய முழு நீள சட்டையை ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்தமை அனைவரதும் கவனத்தை ஈர்த்தது.

ஆனந்த்-ராதிகா திருமணத்திற்கு முந்தைய இரண்டாவது பயணமானது, சிசிலியின் பலேர்மோவில் தொடங்கி, பிரமாண்டமான கொண்டாட்டங்களுடன் இடம்பெற்றது.

மணப்பெண் ராதிகா மெர்ச்சன்ட், அறிமுக நிகழ்வில் ரொபர்ட் வுன் வடிவமைத்த தனித்துவமான மழுநீள சட்டையை அணிந்துவந்து அசத்தினார்.

குறித்த ஆடையானது, ஆனந்த் அம்பானி தனது 22ஆவது பிறந்தநாளில் ராதிகாவுக்காக தனது கைப்பட எழுதிய காதல் கடிதம் அச்சிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த சட்டையில் அச்சிடப்பட்டிருந்த காதல் கடிதம் பற்றி இனிப்பான தருணங்களை ராதிகா நிகழ்வில் பகிர்ந்திருந்தமை நெகிழ்ச்சியான தருணமாக மாறியது.

Share:

Related Articles