NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆனந்த் – ராதிகா திருமணம்: மும்பையில் ஹோட்டல் ஒன்றின் ஓர் இரவுக்கான வாடகை ரூ.300,000

ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் எதிர்வரும்12ஆம் திகதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் மும்பையிலேயே நடப்பதால் மும்பையில் ஓட்டல் முன்பதிவுகளிலும் இதன் தாக்கம் காணப்படுகிறது.

ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணத்தையொட்டி, மும்பையின் முக்கிய ரியல் எஸ்டேட் மையமான பாந்த்ரா-குர்லா வளாகத்தில் அமைந்துள்ள பெரிய ஹோட்டல்களில் முன்பதிவு தீவிரமாக உள்ளது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மும்பையில் உள்ள ஓட்டல்களின் ஆக்கிரமிப்பு மற்றும் விலை அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜூலை 14 அன்று ஒரு ஹோட்டல் ஒரு இரவுக்கு (இலங்கை பெறுமதிப்படி) ரூ. 333,226.69க்கு அறைகளை வழங்குவதாக சுற்றுலா மற்றும் ஹோட்டல் இணையதளங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக வாடகை ரூ. 47,421.42 ஆக இருந்தது. ஆனால் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணத்தையொட்டி ஹோட்டல் அறை வாடகை உயர்ந்துள்ளது.

Share:

Related Articles