இரத்தின கற்கள் மற்றும் பிரத்தியேக ஆபரணங்களை ஏற்றுமதி செய்வதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டுவதனை இலக்காக கொண்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அலுவல்கள் பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான அந்நிய செலாவணியை ஈட்டுவதில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை ஏற்றமதி முக்கிய பங்கு வகிக்கின்றது.
முறையான கொள்கை கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் இந்த துறை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
அத்துடன் தொழிற்துறை போட்டித்தன்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போதைய அரசாங்கம் குறித்த தடைகளை அகற்றுவதில் கவனம் செலுத்துமென கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அலுவல்கள் பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.