ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவுடன் மழையும் பெய்வதால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வறட்சி நிலையை பனிப்பொழிவு குறைத்தாலும், நாட்டின் பொருளாதார இழப்புக்கும் காரணமாக அமைந்து விட்டதுடன், பனிப்பொழிவு காரணமாக நாட்டின் சில சாலைகளும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் மழையின் காரணமாக இதுவரையில் 36 பேர் உயிரிழந்ததாகவும், குறைந்தது 46 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஜான் சைக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.