NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆப்கானிஸ்தானில் பலத்த மழை – சூறாவளி காரணமாக சுமார் 40 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று திங்கட்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது மேலும் 230 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சூறாவளி மற்றும் மழை காரணமாக மரங்கள் மற்றும் வீடுகள் கூரைகள் இடிந்து வீழ்ந்துள்ளன.

இதன்காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles