NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆப்கானிஸ்தானில் வீடுகளில் யன்னல் வைக்க தடை!

ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் பெண்கள் பொது இடங்களில் பாடுவதற்கும், கவிதைகள் வாசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் பெண்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் யன்னல் வைக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, சமையல் அறைகளில், முற்றங்களில் வேலை செய்யும் பெண்களை பார்ப்பது ஆபாசமான செயல்களுக்கு வழி வகுக்கும் என அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் ஜபி ஹில்சா முசாஹித் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உள்ள வீடுகளில் யன்னல்கள் இருந்தால் அதனை மறைக்கும் விதத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், புதிய கட்டிடங்களில் ஜன்னல்கள் இருக்க கூடாது எனவும், அறிவிக்கப்பட்டு உள்ளது.


இதனிடையே, அருகிலுள்ள வீட்டாரிடம் இருந்து தொல்லையை தவிர்க்க சுவர் கட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக கட்டப்படும் கட்டுமான தளங்களை பார்வையிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles