NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை – ஜனாதிபதி

ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மருத்துவ முறையில் பாரம்பரிய மருத்துவர்களும், ஆயுர்வேத பீடத்தில் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். இந்தச் சுகாதார முறைமைகள் இலங்கையிலும் தெற்காசிய நாடுகள் முழுவதிலும் பல ஆண்டுகள் பரவலாகக் காணப்பட்டது.

இப்போது இந்தியா உள்நாட்டு மருத்துவம் குறித்து அதிகளவில் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. இலங்கையில் அது நடக்கவில்லை. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள பிரபலமான உணவகங்களுக்குச் செல்லும்போது, அங்கு ஆயுர்வேத சிகிச்சையைப் பெறலாம்.

இந்தத் திட்டத்தை நாமும் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும்.
எனவே, சுற்றுலாத்துறையில் ஆயுர்வேத மருத்துவம் சேர்க்கப்பட வேண்டும். இது அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட நமக்கு உதவுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles