NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்க கடற்படை!

செங்கடல் பகுதியில் இன்று அமெரிக்க போர்க்கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தாக்குதல் நடத்துவதற்காக ஆளில்லா விமானங்கள் (தாக்குதல் டிரோன்கள்) அனுப்பப்பட்டுள்ளன.

இவற்றை கண்காணித்த அமெரிக்க கடற்படையினர், பல்வேறு டிரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும் ஒருவழி தாக்குதல் டிரோன்கள் என கூறப்பட்டுள்ளது. போர்க்கப்பல் மற்றும் வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles