NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆளுநர்களை இடமாற்றம் செய்ய திட்டம்!

இந்த மாத இறுதியில் பல ஆளுநர்களை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது வடமேல் மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரால் வெற்றிடமாகவுள்ள வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தென் மாகாண ஆளுநராக கடமையாற்றி வரும் வில்லி கமகே இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles