NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை முடக்குமாறு நீதிமன்ற உத்தரவு..!

தனியார் வங்கியொன்றின் சட்டவிரோதமாக பெறப்பட்ட தரவுகளை வெளியிடும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை முடக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

2024ம் ஆண்டின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தனியார் வங்கி தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த பின்னர் கொழும்பு பிரதானநீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வங்கியின் இணைய தரவுக்கட்டமைப்பிலிருந்த தேசிய அடையாள அட்டை விபரங்கள் உட்பட வாடிக்கையாளர்களின் முக்கிய தனிப்பட்ட விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தெரியவந்ததும் அதன் பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்துவதற்கும்இபாதிக்கப்பட்ட அமைப்பை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

விரிவான மதிப்பீட்டிற்காக மிகவும் திறமை வாய்ந்த சைபர் பாதுகாப்புநிபுணர்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.

;

Share:

Related Articles