NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணையம் ஊடாக பாலியல் தொழிலை நடத்தி வந்த இருவர் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இணையம் ஊடாக பாலியல் தொழிலை நடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம – கட்டுவன வீதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றிலேயே இந்த மோசடி இரகசியமாக இடம்பெற்று வந்துள்ளது.

போலி பெயரில் இணையத்தளத்தை ஆரம்பித்து அதில் பெண்களின் புகைப்படங்களை காட்டி இந்த வியாபாரத்தை மேற்கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

முன்பதிவு செய்வதன் பின்னர் அந்தப் பெண் அனுப்பி வைக்கப்படுவார் என்றும் அவர் விசாரணைகளின் போது வெளிப்படுத்தியுள்ளார்.

முன்பதிவு செய்யும் நபரிடம் இருந்து பெண் 6000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அதேவேளை, இணையதளத்தில் தனது படங்களை காட்சிப்படுத்த ஒரு பெண்ணிடம் இருந்து தினமும் 400 ரூபாய் வரை வசூலிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles