NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் – காலிறுதி போட்டி விபரங்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வரும் நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் சிட்சிபாஸ் (கிரீஸ்)-கோரிக் (குரேஷியா) மோதினர்.

இதில் சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடக்கும் அரை இறுதி போட்டிகளில் மெத்வ தேவ் (ரஷ்யா)-சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்ஜர் ருனே (டென்மார்க்)-கஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் மோதவுள்ளனர்.

அன்ஹெலினா கலினினா – குடர்மெடோவா பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் அரை இறுதி போட்டிகளில் குடர்மெடோவா (ரஷியா)-அன்ஹெலினா கலினினா (யுக்ரைன்), ரைபகினா (கஜ கஸ்தான்)-ஆஸ்டா பென்கோ (லாத்வியா) மோதுகிறார்கள்.

Share:

Related Articles