NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இத்தாலி நோக்கி புறப்பட்ட படகுகள் கடலில் மூழ்கியதில் 27 அகதிகள் பலி!

துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்ட இரு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.

இரு படகுகளில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்திருந்த நிலையில், திடீரென வீசிய பலத்த காற்றின் காரணமாக படகுகள் கடலில் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேரை மீட்பு கடற்படையினர் மீட்டுள்ளனர்.

மேலும் சில் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர் காரணமாக அங்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது. எனவே அங்கிருந்து வாழ்வாதாரம் தேடி பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles