’இந்தியா’ என்ற பெயர் மாற்றப்பட்டு ‘பாரத்’ என்று புதிய பெயரிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை டைம்ஸ் நவ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் புதிய தீர்மானத்தை அரசு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்புக் கூட்ட தொடரானது செப்டம்பர் மாதம் 18 – 21 வரை நடைபெறவுள்ளது.
முக்கியமாக ராஷ்டிரபதி பவன், G20 பிரதிநிதிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிக்கையில் ”பாரதத்தின் ஜனாதிபதி” என திரௌபதி முர்முவை குறிப்பிட்டுள்ளது.