இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மன்மோகன் சிங் காலமானதை அடுத்து, அங்கு ஒருவார காலத்திற்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்குகள் முழுமையான அரச மரியாதையுடன் நடைபெறவுள்ள நிலையில், இன்று நடைபெறவிருந்த அனைத்து அரச நிகழ்வுகளையும் இரத்து செய்வதற்கு இந்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது 92 ஆவது வயதில் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
பஞ்சாப்பில் 1932 ஆம் ஆண்டு பிறந்த மன்மோகன் சிங், இரண்டு தடவைகள் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.