(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று (15) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி – செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார்.
குறித்த உரையில், நாட்டின் வளர்ச்சிக்கு உடல் உழைப்பு தொழிலாளர்களின் பங்கெடுப்பு, இந்தியாவின் உயர்வு, இளையோர் சக்தியால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளமை, ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் உன்னத வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளமை, நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பு போன்றன தொடர்பில் முக்கிய உறையாற்றினார்.
இதேவேளை, சுதந்திர தின விழாவின் ஒருபகுதியாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயிண்ட் ஜோர்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை இன்று ஏற்றி கொடி வணக்கம் செலுத்தினார்.