இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கிலோகிராம் மஞ்சள்தூள் 55 பாக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தபோது புறக்கோட்டை சந்தையில் கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நேற்று (12) புறக்கோட்டைப் பகுதியில் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த மஞ்சள் தூள் இறக்குமதி செய்யப்பட்டதற்கான தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட இந்த மஞ்சள்தூள் தொடர்பாக கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.