NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 20 செயலிழந்த எஞ்சின்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஏறக்குறைய 20 புகையிரத என்ஜின்களை இலங்கைக்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்சார புகையிரதங்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், செயலிழந்த சில என்ஜின்களை இலங்கைக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு பொருத்தமான புகையிரத எஞ்சின்கள் உள்ளதா? என்பதை கண்டறியும் வகையில் தொழில்நுட்ப குழுவை எதிர்காலத்தில் இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்தகைய சந்தர்ப்பம் ஒன்றில் குறித்த என்ஜின்களை இலங்கைக்கு கொண்டு செல்வது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles