இந்தியாவில் குழந்தைகளை குறி வைத்து தாக்கும் ‘சன்டிபுரா’ வைரஸ் (Chandipura virus) தொற்றால் இதுவரை 15 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உலகில் புதிதாகப் பல்வேறு வைரஸ் நோய்கள் உருவாகி மக்களைத் தாக்கி வருகின்றன.
அந்தவகையில் குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தில் நேற்று (17) ‘சன்டிபுரா’ வைரஸ் தொற்றுக்குள்ளான 4 வயது குழந்தையொன்று உயிரிந்துள்ளது.
இதனை புனேவிலுள்ள என்.ஐ.வி. எனப்படும் தேசிய வைரலொஜி மையம் உறுதி செய்துள்ளதாக குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 14 சிறுவர்கள் ‘சன்டிபுரா’ வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிருக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.