நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
பீகாரின் முசாபர்பூர், மோதிஹாரி மற்றும் பெட்டையா மாவட்டங்களிலும் உணரப்பட்டது. திபெத்தின் ஷிகத்சே நகரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, திபெத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உள்பட 6 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 38 பேர் காயமடைந்தனர்.
அத்துடன், மேற்கு சீனாவில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலநடுக்கம் இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டானிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.